என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெதர்லாந்து பிரதமர்"
- ருடே சமரசம் செய்ய கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆட்சி கவிழ்ந்துள்ளது.
நெதர்லாந்தில் மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் பிரதமராக இருந்து வந்தார். புலம்பெயர்ந்து நெதர்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்த கூட்டணி கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்பாடாமல் மோதல் முற்றியது.
ருடே சமரசம் செய்ய கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதில் ரகசியம் ஒன்றுமில்லை. இடம்பெயர்வு கொள்கையில் கூட்டணி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்து நிலவியது.
தேர்தல் நடைபெறும் வரை மந்திரி சபை (காபந்து அரசு) தொடரும்' என ருடே தெரிவித்தார். இதன் காரணமாக 150 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது.
ருடே நெதர்லாந்தின் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தில் அடைக்கலம் கேட்டு வருபோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு 47 ஆயிரம் தஞ்சம் அடைய அனுமதி கேட்ட நிலையில், இந்த வருடம் அது இந்த வருடம் 70 ஆயிரமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இதை கட்டுக்குள் கொண்டுவர மாதத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என ருடே தலைமையிலான கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆட்சி கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில், வருகிற தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்து விலக போகவதாக அறிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இருதரப்பு இடையேயான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
- இந்தியா – நெதர்லாந்து உறவுகள் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன.
இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2021 ஏப்ரல் 9 நடைபெற்ற இணையவழி உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவும் பங்கேற்றனர்.
பின்னர், தொடர்ச்சியாக இரு தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வருகின்றனர். தொடர்ச்சியான உயர்நிலை பயணங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் இந்தியா – நெதர்லாந்து உறவுகள் அண்மை ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன.
இந்நிலையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே-யுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.இந்தியா – நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகள் இடையே வேளாண்மை, உயர்தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தியா பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் இருதலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மிகவும் எளிமையானவர். அவரது நடவடிக்கைகளால் அடிக்கடி சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட மார்க் ரூடேவின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மார்க் ரூடே பாராளுமன்ற வளாகத்தில் நுழையும் போது தெரியாமல் அவர் கையில் இருந்த காபி கீழே விழுந்தது. அதனை சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடமிருந்து மாபை வாங்கி ரூடே சுத்தம் செய்கிறார். இதை கண்ட ஊழியர்கள் அவரை பாராட்டினர். இதுகுறித்து வீடியோவை கண்ட பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் ரூடே சென்ற ஆண்டு நெதர்லாந்து மன்னரை சந்திக்க சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் எளிமையான செயல்கள் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #PMMarkRutte
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்